• Download mobile app
12 Feb 2026, ThursdayEdition - 3655
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மாட்டு வண்டியில் வந்து வேட்புமனு தாக்கல் செய்த மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்

February 3, 2022 தண்டோரா குழு

தமிழகத்தில் பிப்ரவரி 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் மாநகராட்சியில் உள்ள ஐந்து மண்டலங்களில் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கோவை மாநகராட்சிக்குட்பட்ட 81 வது வார்டில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயன்(31) தனது வேட்பு மனுவை மத்திய மண்டல அலுவலகத்தில் தாக்கல் செய்தார்.வேட்புமனு தாக்கல் செய்வதற்கு மாட்டு வண்டியில் கட்சியின் சக நிர்வாகிகளுடன் ஊர்வலமாக வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

இவர் தனியார் நிறுவனத்தில் டிசைனிங் இன்ஜினியராக பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க