• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மஹிந்திரா பர்ஸ்ட் சாய்ஸ் வீல்ஸ் ஷோ௫ம் திறப்பு

January 22, 2020

மஹிந்திரா பர்ஸ்ட் சாய்ஸ் வீல்ஸ் ஷோ௫ம் திறப்பு விழா மற்றும் பயன்படுத்தப்பட்ட கார்கள் விற்பனைக்காக கேர் ‘என்’ டீ கார்சுடன் இணைந்து கோவையில் துவக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் நம்பர் ஒன் மல்டி பிராண்ட் சான்றளிக்கப்பட்ட பயன்படுத்தப்பட்ட கார் விற்பனை நிறுவனமான மகேந்திரா பர்ஸ்ட் சாய்ஸ் வீல்ஸ் நிறுவனம்-கேர் ‘என் ‘ டீ கார்சுடன் இணைந்து தனது புதிய ஷோரூமை கோவையில் இன்று திறந்தது. இந்த புதிய ஷோரூம் திறப்பு விழாவில் மஹிந்திரா பர்ஸ்ட் சாய்ஸ் வீல்ஸ் நிறுவனத்தின் சேவை செயல்பாட்டு பிரிவு உதவி துணை தலைவர் சுனில் நாயக் கூறுகையில்,மஹிந்திரா பர்ஸ்ட் சாய்ஸ் வீல்ஸ் குடும்பத்திற்கு கேர் ‘என்’ டீ கார்ஸ் நிறுவனத்தை வரவேற்பதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். மேலும் பயன்படுத்தப்பட்ட கார்கள் விற்பனைக்கு முக்கியத்துவம் வாய்ந்த நகரமாக கோவை விளங்குகிறது இதன் காரணமாக இங்கு மேலும் புதிய டீலர்ஷிப்களை திறப்போம் என்று நம்புகிறேன். வளர்ந்து வரும் வாகன சந்தையில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எங்கள் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது என தெரிவித்தார்.

மேலும் பயன்படுத்தப்பட்ட கார்கள் துறையில் பல ஆண்டுகளாக, மஹிந்திரா பர்ஸ்ட் சாய்ஸ் வீல்ஸ் நிறுவனம் இந்தியாவின் முன்னணி கார் நிறுவனமாக திகழ்ந்ததோடு மட்டுமல்லாமல் பயன்படுத்த கார்கள் விற்பனையில் சிறப்பான கட்டமைப்பை உருவாக்கி பங்காற்றி வருகிறது மேலும் இந்தியாவில் இதுவரை 177 ஷோ௹ம்கள் திறப்பு நடப்பு நிதியாண்டில் 200 ஷோ௹ம்கள் திறக்க இலக்கு மற்றும் பயன்படுத்தப்பட்ட கார்களின் தற்போதைய சந்தை மந்த நிலையில் இருக்கும் போதிலும் அடுத்த 5 ஆண்டுகளில் புதிய கார் சந்தையை காட்டிலும் இதன் விற்பனை இரண்டு மடங்காக உயரும் என தெரிவித்தார்.

மேலும் படிக்க