• Download mobile app
17 Aug 2025, SundayEdition - 3476
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மஹாராணி எனும் பிரத்யேக சேவை திட்டம் துவக்கம் !

October 31, 2021 தண்டோரா குழு

முதியோர் இல்லங்களில் வசிக்கும் தாய்மார்களின் பன்முகத்திறமையை வெளிப்படுத்தும் விதமாக மஹாராணி எனும் பிரத்யேக சேவை திட்டம் கோவையில் துவக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வேலை குடும்ப சூழல் போன்ற காரணங்களால் முதியோர் இல்லங்களும், ஆதரவற்ற தாய்மார்களும் அதிகரித்து வரும் சூழலில், முதியோர் இல்லங்களில் வசித்து வரும் தாய்மார்களின் நலன் மற்றும் அவர்களது வெளிபடுத்தாத பன்முக திறமையை வெளிக்கொண்டு வரும் விதமாக மஹாராணி எனும் சேவை திட்டத்தை கோவையை சேர்ந்த மோகன் நாயர் என்பவர் துவக்கி உள்ளார்.

செல்லக்குட்டீஸ் நண்பர்கள் குழு எனும் அவரது நண்பர்களுடன் இணைந்து துவங்கியுள்ள இதற்கான துவக்க விழா கோவை என்.எஸ்.ஆர். சாலையில் உள்ள ஜே.கே.ஓட்டல்ஸ் அரங்கில் நடைபெற்றது.இதில் சிறப்பு அழைப்பாளர்களாக அனூப் ஆண்டனி, தமிழக சேனா நிறுவனர் குணா,தி.மு.க.நிர்வாகி வினோத், உட்பட முக்கிய விருந்தினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மஹாராணி திட்டம் குறித்து மோகன் கூறுகையில்,

கடந்த காலங்களில் ஏராளமான முதியோர் இல்லங்களுக்குச் சென்று பல்வேறு விதமான அனுபவங்களை அங்கிருந்த தாய்மார்களிடம் இருந்து பெற்ற நிலையில் ஆதரவற்ற தாய்மார்களின் தேவைகளை கவனித்துக் கொள்ள பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இருந்தாலும் அவர்களது தனிப்பட்ட பன்முகத் திறமையை வெளிக்கொண்டு வரும் விதமாக இந்த திட்டத்தை துவக்கி உள்ளதாகவும் இதன் மூலம் அவர்களது தோட்டக்கலை தையல் பின்னல் கால்நடை வளர்ப்பு படித்தல் ஓவியம் வரைதல் போன்ற போன்ற பல்வேறு திறன்களை இதில் இணைத்து அவர்களுக்கு பயிற்சி கொடுத்து ஊக்குவிக்க விரும்புவதாகக் குறிப்பிட்டார்.

மேலும் முதியோர் இல்லங்களில் வசிக்கும் தாய்மார்களின் தனிப்பட்ட பல்வேறு விதமான ஆசைகளையும் இத்திட்டத்தின் வாயிலாக பூர்த்தி செய்ய இருப்பதாக அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க