May 8, 2018
தண்டோரா குழு
கோவையில் ஒரு மணி நேரத்திற்கு மேல் மழை பெய்து வருவதால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ளதால் தமிழகம் முழுக்க வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது.இதனால் பொதுமக்கள் மதிய நேரத்தில் வீடுகளை விட்டு வெளியே வரமால் இருந்து வருகின்றனர்.கோவையிலும் அக்னி நட்சத்திரம் தொடங்கியதில் இருந்து வெப்பம் வாட்டி வந்தது.
இந்நிலையில் இன்று மதியம் முதல் கோவை மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை பெய்தது. கோவை காந்திபுரம்,உக்கடம்,கணபதி,துடியலூர்,பெரியநாயக்கன்பாளையம்,கவுண்டம்பாளையம், மருதமலை,பீளமேடு உள்ளிட்ட பகுதிகளில் 1 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.மழை காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.கடந்த சில நாட்களாக அக்னி வெயில் வாட்டி வந்த நிலையில் தற்போது பெய்துள்ள மழை கோவை மக்களை மகிழ்ச்சியடைந்துள்ளனர்.