• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மருந்துக்கடைகள் அடைப்பால் 300 கோடி ரூபாய் இழப்பு

April 3, 2018 தண்டோரா குழு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி, தமிழகம் முழுவதும் நடைபெற்ற  மருந்துகடைகள் அடைப்பு போராட்டத்தால் 300 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டு உள்ளதாக மருந்துகடை சங்கத்தின் பொதுசெயலாளர் செல்வம் தெரிவித்து உள்ளார்.

காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மருந்துக் கடைகள் இன்று அடைக்கப்பட்டது.இந்நிலையில் கோவை மாவட்டத்தில்,ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருந்து கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய, மருந்துகடை சங்கத்தின் பொதுசெயலாளர் செல்வம்,

தமிழகம் முழுவதும் 30 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டதாகவும்,300 கோடி ரூபாய் வரை இதனால் நஷ்டம் ஏற்பட்டதாகவும் கூறினார்.மேலும் வருகிற ஐந்தாம் தேதி திமுக அறிவித்து உள்ள போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க முடியாது எனவும்,ஏற்கனவே இன்று  நடைபெற்ற போராட்டத்தால் பல கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளதாகவும் இன்றே தங்களது ஆதரவை காவேரி விவகாரத்திற்காக தெரிவித்து விட்டதாகவும் அவர் கூறினார்.மேலும்,மருந்து கடைகள் இன்று அடைத்து இருந்தாலும் அத்யாவசிய தேவைக்கான மருந்துகள் வழங்கப்பட்டதாகவும் கூறினார்.

 

மேலும் படிக்க