March 14, 2018
தண்டோரா குழு
கோவையில் மருத்துவ காப்பீடு தொகையை அமுல்படுத்த கோரி இன்று போராட்டம் நடைபெற்றது.
ஓய்வூதியர்களுக்கு தமிழக அரசு அமுல்படுத்தும் மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள முரண்பாடுகளையும்,குறைகளையும் களைந்து புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தை அமுல்படுத்தகோரி தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வுதியர் சங்கம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலைமச்சருக்கு முறையிடு அனுப்பும் போராட்டம் நடைபெற்றது
இந்த போராட்டத்தில் அவர்கள் மருத்துவ சிகிக்சை மற்றும் அறுவை சிகிக்சை ஆகிய இரண்டுக்கும் முழுமையான செலவு தொகையை காப்பீடு நிறுவனம் முழுமையாக வழங்க வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து போராட்டம் நடத்தினர்.