• Download mobile app
30 Apr 2024, TuesdayEdition - 3002
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் மருத்துவ காப்பீட்டுக்கு திட்டத்தில் ஆதார் எண் இணைக்கும் பணிக்கு சிறப்பு முகாம்கள்

May 9, 2017 தண்டோரா குழு

தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் ஆதார் அட்டை எண்ணுடன் இணைக்கப்படாத பயனாளிகளை சேர்க்கும் வகையில் கிராமம் வாரியாக சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது; “கோவை மாவட்டத்தில் உள்ள முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட பயனாளிகள் பட்டியலில் பெயர் உள்ளவர்கள் அனைருக்கும் ஆதார் அட்டை எண் இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

அதில் ஆதார் அட்டை எண்ணுடன் இணைக்கப்படாத பயனாளிகளை சேர்க்கும் வகையில் கிராமம் வாரியாக சிறப்பு முகாம்களை நடத்தி, காப்பீட்டுத் திட்டத்துடன் ஆதார் எண் இணைக்கும் பணியானது நடைபெறுகிறது.

பயனாளிகள் குடும்ப அட்டை, காப்பீட்டு அட்டை மற்றும் ஆதார் அட்டையுடன் தங்கள் கிராமத்தில் நடைபெறும் இணைப்பு முகாமில் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இணைப்பு முகாம் நடைபெறும் நாள் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அதிகாரி மூலமாக முன்னறிவிப்பு செய்யப்படும்.

அந்தந்த பகுதியில் நடைபெறும் முகாம்களில் கலந்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.”

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க