March 8, 2021
தண்டோரா குழு
காவிரி குரூப் ஆப் கம்பெனி மற்றும் லயன்ஸ் கிளப் ஆஃப் கோயமுத்தூர் ஜூபிடர் இணைந்து நடத்திய மரம் நடும் விழா கவுண்டம்பாளையம் டிவிஎஸ் நகர் பகுதியில் உள்ள காவிரி தோட்டப் பண்ணையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக முன்னாள் மாவட்ட ஆளுநர்கள் அரிமா என் பாலகிருஷ்ணன் மற்றும் அரிமா பிகே ஆறுமுகம் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு லயன்ஸ் கிளப் ஆஃப் கோயமுத்தூர் ஜூபிடர் தலைவர் அரிமா சுரேஷ்பாபு வரவேற்புரை வழங்கினார்.
லயன்ஸ் கிளப் ஆப் கோயம்புத்தூர் ஜூபிடர் இயக்குனர் மற்றும் காவிரி குரூப் ஆப் கம்பெனி இணை நிர்வாக இயக்குனர் அரிமா கே வினோத் சிங் ரத்தோர் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் அவர் பேசுகையில்,
கோவை மாவட்டத்தில் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ள தாகவும் தற்போது அரிமா சங்கம் மூலம் காவிரி குரூப்பின் டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள காவிரி தோட்டப் பண்ணையில் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் செவ்வரளி செடிகள் மற்றும் தென்னை மரக்கன்றுகள் நடப்பட உள்ளதாக தெரிவித்தார்.
இதில் முக்கிய நிகழ்வாக மரம் நடும் நபர்களின் பெயரை மரத்தில் பொருத்தி வைக்கப்படும் என்றார். மேலும்,நாம் பூமிக்கு இதுபோன்ற அர்பபணிப்பு செய்வதன் மூலம் நமது தொழில் வளர்ச்சி பெருகும்
என்றார்.
நிகழ்வில் தொடர்ந்து,புதிய உறுப்பினர்கள் அரிமா கிருஷ்ணகுமார், அரிமா சரவண குமார், அரிமா. திருமூர்த்தி மற்றும்அரிமா டாக்டர் கே. பூர்ணேஷ் கண்ணா ஆகியோர் முன்னாள் மாவட்ட ஆளுநர் அரிமா பிகே ஆறுமுகம் முன்னிலையில் லயன்ஸ் கிளப் ஆப் கோயம்புத்தூர் ஜூபிடர் சங்கத்தில் தங்களை இணைந்து கொண்டு உறுதிமொழி எடுத்தனர்.
தொடர்ந்து காவேரி தோட்டப் பண்ணையில் மரம் நடும் விழா நடைபெற்றது.இதனை மாவட்ட ஆளுநர் அரிமா குப்புசாமி,இரண்டாம் துணை மாவட்ட ஆளுநர் அரிமா மோகன் குமார் மரக்கன்றுகளை நட்டனர். நிகழ்ச்சியில் அரிமா வீரான் குட்டி, அரிமா பொன்னம்பலம், அரிமா மகாலிங்கம் மற்றும் அரிமா நிர்வாகிகள், காவிரி குரூப் ஆப் கம்பெனி பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.