January 13, 2021
தண்டோரா குழு
ஆலாந்துறை காமாட்சி அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் சஞ்சீவிகுமார். இவர் பிகாம் மூன்றாம் ஆண்டு கற்பகம் கல்லூரியில் படித்து வருகிறார். இவரும் இவரது உறவினரான அனந்தராமன் அரசு மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இருவரும் ஆலாந்துறையிலிருந்து அவர்களது அத்தையை சென்னனூரில் விட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
வரும்போது சிறுவாணி சாலையில் சிவசக்தி திருமண மண்டபம் அருகேயுள்ள சாலையின் இடதுபக்கத்தில் இருக்கும் வாகை மரத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரை ஓட்டி வந்த சஞ்சீவ்குமார், அனந்தராமன் இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை ஆறு மணியளவில் இருவரும் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து பேரூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.