• Download mobile app
06 Nov 2025, ThursdayEdition - 3557
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மனைவியின் கழுத்தை பிளேடால் அறுக்க முயன்ற கணவர் கைது

December 6, 2019

கோவை பெரிய கடை வீதி காவல் நிலைய முதல்நிலை போக்குவரத்து காவலராக அய்யலு கணேசன் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஸ்ரீஜா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். அய்யலு கணேஷனுக்கு கடந்த இரண்டு வருடங்களாக கோவைபுதூரை சேர்ந்த ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்து மனைவியை சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது.இதன் காரணமாக கடந்த பத்து மாதங்களுக்கு முன் கணவரை பிரிந்த ஸ்ரீஜா சுண்டக்காமுத்தூரிலுள்ள, தனது அம்மா ஓமனா வீட்டில் தனது மகன், மகளுடன் வாழ்ந்து வருகிறார்.

இதற்கிடையில், தனது அம்மா வீட்டிற்கு வரும் அய்யலு கணேசன், தன்னை அடிக்கடி அடித்து துன்புறுத்துவதாக கூறி ஸ்ரீஜா,பேரூர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இதனையடுத்து காவல் துறையினர் , ஸ்ரீஜாவை சமாதானம் செய்து அனுப்பியுள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு மனைவி ஸ்ரீஜாவை கணவன் அய்யலு கணேசன் தாக்கியது தொடர்பாக , ஸ்ரீஜா மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாக புகாரளித்துள்ளார்.இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கண்காணிப்பாளர் உறுதியளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று சுண்டாகமுத்தூரிலுள்ள தனது மாமியார் வீட்டிற்கு சென்ற, அய்யலு கணேசன் தனது மனைவி ஸ்ரீஜாவை கடுமையாக தாக்கியுள்ளார்.தனது மகள் அடிவாங்குவதை பார்த்து பதறிய ஓமணா தடுக்க முற்பட்டபோது ஓமனாவை தாக்கியதோடு,தடுக்க வந்த தனது மகளையும் தாக்கினார். இதனிடையே ஸ்ரீஜாவின் முகத்தில் இருந்து ரத்தம் நிற்காமல் வழிந்ததால், அவசர ஊர்தி வரவழைப்பட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் மூவரும் அனுமதிக்கப்பட்டனர்.அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஸ்ரீஜாவிற்கு முகத்தில் ஏற்பட்ட காயத்திற்கு மருத்துவர்கள் ஸ்கேன் எடுக்குமாறு கூறியுள்ளனர்.

இதனையடுத்து ஸ்ரீஜா பெண்கள் வார்டிலிருந்து ஸ்கேன் எடுக்க செல்லும் வழியில், அய்யலு கணேசன் தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் மனைவியின் கழுத்தை அறுக்க முற்பட்டுள்ளார்.அப்போது ஸ்ரீஜா தனது இரு கைகளையும் கழுத்து பகுதியில் வைத்து தடுக்க முயற்சித்துள்ளார்.அதில் அவருக்கு வலது கை பகுதியில் பலத்த காயம் ஏற்பபட்டது. அப்போது அங்கு இருந்த பொது மக்கள் மற்றும் காவல் துறையினர் அய்யலு கணேசனை பிடித்து வைத்துள்ளனர். ஸ்ரீஜாவின் கையில் அதிக இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் 9 தையல் போடப்பட்டுள்ளது. ஸ்ரீஜா கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து பேரூர் காவல் துறையினர் அய்யலு கணேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்ரீஜா திருமானத்திற்கு முன்பே சினிமாவில் நடித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளாக சினிமா படத்தில் நடிக்காமல் இருந்துள்ளார். போலீசார் அய்யலு கணேசிடம் நடத்திய விசாரணையில் சினிமா படத்தில் நடிக்க , ஸ்ரீஜா அனுமதி கேட்ட போது, அதை மறுத்தால் பிரச்சனை ஏற்பட்டதாக அவரது கணவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அய்யலு கணேசன் மீது பேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க