July 5, 2018
தண்டோரா குழு
கோவை உக்கடம் பகுதியில் அமைந்துள்ள சாக்கு வியாபாரி சங்க அலுவலகத்தில் மனித நேய மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டமானது இன்று(ஜூலை 7)நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கோவை மாநகர குடிநீர் விநியோகித்தினை பன்னாட்டு நிறுவனமான சூயஸ் கம்பெனிக்கு கொடுப்பதற்கு கண்டனங்களை தெரிவித்து போராட்டங்கள் நடத்தபோவதாகவும்,
கோவை ஆத்துப்பாலம் முதல் ஒப்பனகார வீதி வரை மேம்பாலம் அமைக்கும் பணிகளை மேற்கொள்ள இருக்கும் நெடுஞ்சாலைத்துறை மேம்பாலம் குறித்த உண்மையான வரைப்படத்தை மக்களின் பார்வைக்கு வெளியிடுமாறும்,இல்லையென்றால் மனித நேய மக்கள் கட்சி சார்பாக மிக பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தபோவதாக தெரிவித்தனர்.
இச்செயற்குழு கூட்டத்தில் மனித நேய மக்கள் கட்சியின் மத்திய பகுதியின் தலைவர் முகமது இப்ராஹிம்,செயலாளர் அலாவுதீன் மற்றும் ஆஷிக் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.