March 28, 2021
தண்டோரா குழு
கோவை தெற்கு தொகுதியின் சட்டமன்ற வேட்பாளராக மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல்ஹாசனும்,அதிமுக கூட்டணி கட்சியான பாஜக சார்பில் அதன் அகில இந்திய தலைவர் வானதி சீனிவாசனும்,திமுக சார்பில் கூட்டணி கட்சியான காங்கிரஸின் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் போட்டியிடுகிறார்கள். மற்ற கட்சிகள் போட்டியிட்டாலும், மநீம மற்றும் பாஜகவினரிடையே கடும் போட்டி நிலவுகிறது.
கமல் செய்வதையே மற்ற வேட்பாளர்கள் செய்தாலும் கமலை கண்டு பாஜகவினர் பயந்துதான் போயியுள்ளனர்.இந்நிலையில் கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட நூறடி சாலை பாஜக தேர்தல் அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் மநீம வேட்பாளர் கமலஹாசன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.மநீம தொண்டர்கள் நமது சின்னம் டார்ச் லைட் , டார்ச் லைட்டுக்கே உங்கள் ஓட்டு என கோசங்களை எழுப்பினர்.
இதனைத்தொடர்ந்து பாஜக தேர்தல் அலுவலகத்தில் இருந்து வெளியே
கையில் கொடியுடன் தொண்டர்கள்
பாரத மாதவிற்கு ஜே , தாமரை மலரும் என கோசங்களை எழுப்பினர். இரு கட்சியினரும் கோச சண்டையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து கமலஹாசன் தனது பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.பாஜக மற்றும் மநீம இடையே நிலவும் கடும் போட்டி காரணமாக , மத்திய அமைச்சர்கள் மற்றும் நட்சத்திர பேச்சாளர்கள் என பலர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.