• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மநீம கட்சியின் சார்பாக 300 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள்

June 17, 2021 தண்டோரா குழு

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட மநீம தலைவர் கமல்ஹாசன் சார்பாக, அந்த தொகுதியின் ஒரு பகுதியான கல்லுக்குழி பகுதியில் நேற்று நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.

300 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், மற்றும் மளிகை பொருட்களை, மநீம மாநிலச் செயலாளர்கள் மயில்சாமி, முனைவர் அனுஷா ரவி, மூகாம்பிகா, ரங்கநாதன், பங்கஜ், மாவட்டச் செயலாளர்கள் பிரபு, சத்தியநாராயணன் ஆகியோர் துவக்கி வைக்க, மாநகராட்சி செயலாளர் மணிக்கொடி மற்றும் நிர்வாகிகள் வழங்கினர்.

இது குறித்து கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில்,

அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் கோவை கல்லுக்குழி மக்களின் வாழ்வை மேலும் கடினமாக்கியது கொரோனா. இங்கு வசிக்கும் 250 குடும்பங்களுக்கு மநீம உறுப்பினர்கள் மளிகைப்பொருட்கள் வழங்கிய செய்தி கேட்டு மகிழ்கிறேன். விரைவில் நானும் என் நன்றியையும் அன்பையும் தெரிவிக்க இவ்விடங்களுக்கு வருவேன் என பதிவிட்டுள்ளார்

மேலும் படிக்க