• Download mobile app
04 Nov 2025, TuesdayEdition - 3555
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மது போதையால் ஏற்பட்ட தகராறில் இருவர் கொலை

November 5, 2018 தண்டோரா குழு

கோவை சரவணம்பட்டி காவல் நிலையத்திற்குட்பட்ட இருவேறு இடங்களில் மது போதையால் ஏற்பட்ட தகராறில் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

கோவை கணபதி அடுத்த பதிகவுண்டர் தோட்டம் அருகே இன்று காலை இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞரை , வழிமறித்த மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் தலையில் கத்தியால் குத்தி கொலை செய்தனர். சம்பவத்தை பார்த்த அப்பகுதி மக்கள் சரவணம்பட்டி காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உடல் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இறந்தவர், கணபதி அடுத்த உடையாம்பாளையம் பகுதியை சேர்ந்த பிரவின் குமார் என்றும், மது போதையில் ஏற்பட்ட தகராறில் பிரவின் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனறும் காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் இந்த கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினத் பிரவின் குமாரின் நண்பர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதே போல கணபதி அடுத்த சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில், பணியாற்றி வரும் ஒடிசா மாநில தொழிலாளர்களிடையே நேற்று இரவு மது போதையில் ஏற்பட்ட தகராறில் சச்சின்(30) என்ற வடமாநிலத்தை சேர்ந்தவர் க கல்லால் அடித்து கொலை செய்யப்ட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், வடமாநில தொழிலாளர்கள நான்கு பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் படிக்க