June 8, 2019
தண்டோரா குழு
கோவையில் மதமாற்றம் செய்யமுயன்ற இருவரை பிடித்து சரவணம்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
கோவை கணபதி காந்தி மாநகர் பகுதியில் சிலர் மதமாற்றம் செய்ய முயற்சி செய்வதாக வந்த தகவலை அடுத்து அங்கு வந்த பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த சுவாமிநாதன் மண்டல துணை தலைவர், சிவக்குமார் கணபதி மண்டல் பொதுச் செயலாளர் .கணபதி மண்டல் தலைவர் வெங்கடேஷ், மாவட்ட விவசாய அணி பொதுச் செயலாளர் தரணி சிவா, மாவட்ட சிறுபான்மையினர் அணி துணைத் தலைவர் ரபீக் மற்றும் இந்து முன்னணியினர் சேர்ந்து இருவரையும் பிடித்து அருகில் உள்ள சரவணம்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்கள்.
இதையடுத்து, நடத்தப்பட்ட விசாரணையில் ஒருவர் பெயர் ஜோஸ்வா, மால்ற்றொருவர் ஜோயல் என தெரியவந்துள்ளது.