May 17, 2018
தண்டோரா குழு
கோவையில் மக்கள் நீதி மையத்தின் சார்பாக இலவச இருதய சிகிச்சை முகாம் நடைபெற்றது.
கோவை கவுண்டம்பளையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் மக்கள் நீதி மய்யம் மற்றும் மெட்கிரீன் மருத்துவமனை சார்பாக இன்று இலவச இருதய மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமை மக்கள் நீதி மையத்தின் உயர் மட்ட குழு உறுப்பினர் தங்கவேலு அவர்கள் துவக்கி வைத்தார்.கோவை மாவட்டம் மட்டுமல்லாமல் அனைத்து மாவட்டங்களிலும் இந்த மருத்துவமுகமானது நடைபெற்று வருகிறது.இன்று கோவை மாவட்டத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமில் 250க்கும் மேற்பட்டோர் பங்கு பெற்று பயனடைந்தனர்.