• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் மகா பெரியவரின் பஞ்சலோக விக்ரஹத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது.

June 27, 2019 தண்டோரா குழு

கோவையில் காஞ்சி காமகோடி , 68வது பீடாதிபதி சந்திரசேகரேந்திர சரஸ்வதி மங்க ஸ்வாமிகள் மகா பெரியவர் மணி மண்டபம் மற்றும் சாமவேத பாடசாலை கட்டப்பட்டு, நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் மகா பெரியவரின் பஞ்சலோக விக்ரஹத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது.

கோவை பேரூர் , சொர்க்கவாசல் வீதியில் உள்ள சாமவேத பாராயண மடத்தில், காஞ்சி மகா பெரியவர் விக்ரஹம் பிர திஷ்டை மற்றும் கும்பா பிஷேக விழா கடந்த 23 ந்தேதி துவங்கியது. சாமவேத பாராயணம் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர்கள் ராம் மற்றும் லட்சுமணன் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இதில் முன்னதாக சாம வேத பாராயண மடத்தில் , காஞ்சி காமகோடி , 68வது பீடாதிபதி சந்திரசேகரேந்திர சரஸ்வதி மங்க ஸ்வாமிகள் மகா பெரி யவர்மணி மண்டபம் மற்றும் சாமவேத பாடசாலை கட்டப்பட்டு,மகா பெரியவரின் பஞ்சலோக விக்ரஹம்,ஆதிசங்கரர், வேத வியாசர், மற்றும் ஜெயேந்திரர் விக்ரஹங்கள் நிறுவப்பட்டது.

பின்னர் மகா பெரியவரின் விக்ரஹம் சென்னை , மதுரை , திருச்சி , திரு வண்ணாமலை , ஆத் துார் , சேலம் , ஈரோடு , பாலக்காடு , பெங்களூரு மற்றும் பல்வேறு கிராமங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு , பூஜை , ஆராதனை முடிந்து ,கோவைக்கு கொண்டு வரப்பட்டு,கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.

காஞ்சிபுரம் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற இதில் முன்னதாக யாக சாலை அமைக்கப்பட்டு மகா கணபதி ஹோமம் நடைபெற்றது. பின்னர் நான்கு மற்றும் ஐந்தாம் கால பூஜைகள் நடைபெற்றது. மேலும், மகா சங்கல்பமும், மகா பூர்ணாஹூதியும் நடைபெற்று, மேள தாளம் முழங்க புனிதநீர் கலசங்கள் யாக சாலையிலிருந்து ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு,மகா பெரியவாவின் விக்ரகத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. இந்த விழாவில் கோவை உட்பட பல்வேறு பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க