June 9, 2021
தண்டோரா குழு
கோவையில் 4 மாதங்களுக்கு முன் மாயமான 16 வயது சிறுமியை கண்டுபிடித்து தரக்கோரி சிறுமியின் தாய் கண்ணீர் மல்க மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.
கோவை பி.கே.புதூர் பகுதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி, கணவனை பிரிந்து மகளுடன் வசித்து வந்தார்.இவரது 16 வயது, மகள் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 4 மாததிற்கு முன் கல்லூரி சென்ற சிறுமி மாயமானதால், இதையடுத்து விஜயலட்சுமி குனியமுத்தூர் போலீஸில் புகார் அளித்தார்.
இதனிடையே மாயமான சிறுமி ஆந்திராவில் இருப்பதாக சிறுமியிடமிருந்து செல்போனுக்கு அழைப்பு வந்தது.அதன் பின் தொடர்பு கொள்ளவில்லை என விஜயலட்சுமி தெரிவித்தார்.மேலும் சிறுமியை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த சிவா என்ற இளைஞர் கடத்தி சென்று விட்டதாகவும், அவர் மீது துடியலூர் போலிஸ் அதிக புகார்கள் உள்ளதாக தெரிவித்த அவர், உடனடியாக தனது மகளை மீட்டு தர வேண்டும் என கோரி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளார்.
மகள் மாயமாகி 4 மாதம் ஆகிய நிலையில் அவர் உயிரிரோடு இருக்கிறா? இல்லையா என்பது கூட தெரியவில்லை என கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.