• Download mobile app
16 Nov 2025, SundayEdition - 3567
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மகளிர் இலவச பேருந்து பயண திட்டத்தில் 11.64 கோடி பேர் பயணம்

November 28, 2022 தண்டோரா குழு

மகளிர் இலவச பேருந்து பயண திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் அரசு நகரப் பேருந்துகளில் 11..64 கோடி பேர் கட்டணமில்லா பயணங்கள் மேற்கொண்டுள்ளனர் என ஆட்சியர் சமீரன் தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் உள்ள அரசு போக்குவரத்துக் கழகக் கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் பணிபுரியும் மகளிர், உயர்கல்வி பயிலும் மாணவியர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லாமலும், பேருந்துப் பயண அட்டை இல்லாமலும் பயணம் செய்யும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் அறிவித்தார்.

மகளிர் இலவச பேருந்து பயண திட்டம் பெண்களின் சமூக பொருளாதார நிலை மற்றும் பொருளாதாரத்தின் வளர்ச்சியை மேம்படுத்தும் சிறப்பு திட்டமாகும். இந்த கட்டணமில்லா பேருந்து பயணத்திட்டத்தின் மூலம் அன்றாட தேவைகள், கல்வி நிலையங்கள், வேலைக்கு பெண்கள் எளிதாக சென்று வரமுடிகிறது.
இதன்மூலம், மகளிர் மற்றவர்களின் துணையின்றியும், கட்டணமில்லாமலும் பயணம் மேற்கொள்ள முடிகிறது. இத்திட்டமானது மகளிர் உட்பட அனைத்து தரப்பினரிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் கடந்த ஜூலை 2021 முதல் செப்டம்பர் 2022 வரை சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் 11.57 கோடி மகளிரும், 5.75 லட்சம் மாற்றுத்திறனாளிகளும், 32 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளின் உதவியாளர்களும், 66 ஆயிரம் திருநங்கைகளும் என மொத்தம் 11.64 கோடி நபர்கள் கட்டணமில்லா பயணங்கள் மேற்கொண்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மேலும் படிக்க