• Download mobile app
05 Feb 2026, ThursdayEdition - 3648
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் போலீஸ் என கூறி பணம் பறித்த இருவர் கைது

January 7, 2020 தண்டோரா குழு

கோவை மத்திய பேருந்து நிலையத்தில் போலீஸ் என கூறி பணம் பறித்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்தவர் சிவகுமார் வயது 35 கூலித்தொழிலாளி. நேற்று இரவு இவர் கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் தங்களை போலீஸ் என அறிமுகம் செய்து கொண்டனர். பின்னர் சிவகுமாரை மிரட்டி அவரிடம் இருந்து பணத்தை பறித்து தப்பிச் சென்றனர் அப்போது அந்த வழியாக வந்த போலீசார் அந்த ரெண்டு பேரையும் மடக்கி பிடித்தனர்.

பின்னர் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர் விசாரணையில் இவர்கள் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த அபுதாகிர் வயது 40 மேட்டுப்பாளையம் காட்டூர் சேர்ந்த ஆனந்த் 55 என்பது தெரியவந்தது. இதையடுத்து, இரண்டு பேரையும் போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க