April 8, 2020
தண்டோரா குழு
கோவை செல்வபுரம் பகுதியில் போலீசார் வாகன சோதனையின் போது வாக்குவாதத்தில் ஈடுபட்ட இந்து பாரத் சேனா அமைப்பை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.
கோவை பேரூர் அருகே உள்ள சின்னக் கோவில் வீதியை சேர்ந்தவர் ஜெகதீஷ் வயது 44. இவர் பாரத் சேனா இளைஞர் அணி மாநில அமைப்பாளராக உள்ளார். சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் பேரூர் சோதனை சாவடி வழியாக வந்து கொண்டிருந்தார் சோதனை சாவடியில் செல்வபுரம் சப் இன்ஸ்பெக்டர் சின்னதுரை தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது ஜெகதீசன் மோட்டார் சைக்கிளை சப் இன்ஸ்பெக்டர் சின்னதுரை தடுத்து நிறுத்தினார். எங்கு செல்கிறீர்கள் வெளியே வரக்கூடாது என 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது என்று கேட்டனர்.அதற்கு அவர் சும்மா தான் வெளியே வந்தேன் என்று சப் இன்ஸ்பெக்டரிடம் தகாத வார்த்தைகள் பேசி தகராறு செய்தார்.
இதுகுறித்து சப் இன்ஸ்பெக்டர் சின்னதுரை செல்வபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் ஜெகதீஷ் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் தொற்றுநோய் தடுப்பு சட்டம் தடை உத்தரவை மீறுதல்உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.