• Download mobile app
21 Dec 2025, SundayEdition - 3602
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் போலி முத்திரை தயாரித்ததாக திமுக ஒன்றிய செயலாளர் கைது!

November 3, 2018 தண்டோரா குழு

கோவை தொண்டாமுத்தூர் அருகே போலி ஆவணம், போலி முத்திரை தயாரித்து மோசடி செய்ததாக திமுக ஒன்றிய செயலாளர் மீது புகார் அளித்ததன் பேரில் காவல் துறையினர் அவரை கைது செய்து உள்ளனர்.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பாமாகோபிநாத் என்பவர் சேனாதிபதி மற்றும் வீரகேரளத்தை சேர்ந்த இருவரிடம் சோமையாம்பாளையம் ஊராட்சியில் சுமார் 1 ஏக்கர் நிலம் வாங்கியும், அதே பூமியை வீடுமனைகள் கட்டி விற்க, நேரு நகர் என்ற பெயரில் திமுக ஒன்றிய செயலாளர் சேனாதிபதி என்பவர் 23 வீட்டு மனைகளாக பிரித்து அதில் 10 வீட்டுமனைகளை விற்று உள்ளார். அதில் வீட்டுமனைகள் வரன்முறை படுத்தப்படாமல் இருந்ததை வரன்முறைபடுத்தப்பட்டதாக சேனாதிபதி போலியாக ஆவணங்களை தயாரித்து அதில் போலியாக தயாரித்த முத்திரைகளையும் பயன்படுத்தி அதில் வட்டார வளர்ச்சி அலுவலர் வழங்கப்பட்ட ஆணையாக கையொப்பம் செய்து போலியாக உருவாக்கி அதில் வீடுகட்டி விற்பனை செய்து உள்ளார்.

இந்நிலையில் போலி ஆவணம், போலி முத்திரை தயாரித்து மோசடி செய்ததாக திமுக ஒன்றிய செயலாளர் மீது பெரியநாயக்கன் பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் நவமணி கொடுத்த புகாரின் பேரில் தொண்டாமுத்தூர் திமுக ஒன்றிய செயலாளர் சேனாதிபதி என்பவரை காவல் துறையினர் கைது செய்து உள்ளனர். விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிறையில் அடைக்க உள்ளனர்.

மேலும் படிக்க