• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் போராட்டத்துடன் புத்தாண்டை வரவேற்ற இஸ்லாமியர்கள்

December 31, 2019

கோவையில் தேசியகொடி, மெழுகுவர்த்தி ஏந்தி கோரிக்கை வலியுறுத்தி ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவையில் உக்கடம் பேருந்து நிலையம் அருகே ஆயிரத்துக்கு மேற்பட்ட இஸ்லாமியர்கள் குடும்பத்துடன் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை கண்டித்து போராட்டம் நடத்தினர். மேலும் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி நின்றும், தேசிய கொடியை கையில் ஏந்தியும் பெண்கள், குழந்தைகள் ஆகியோர் பங்கேறனர். எஸ்.டி.பி.ஐ கட்சியினர் போராட்டத்தை முன்நின்று நடத்தினர்.

உக்கடம் மத்திய சாலையில் தொடங்கி டவுன்ஹால் சாலை வரைக்கும் பேரணியாக கையில் மெழுகுவர்த்தி ஏந்தியும் கோரிக்கைகள் முன்நிறுத்தியும் போராட்டத்தை நடத்தினர். மேலும் மத்திய,மாநில அரசுக்கு எதிராக போராட்டத்தில் முழக்கங்கள் எழுப்பட்டது. இரவு 11.30 மணிக்கு தொடங்கிய போராட்டமானது 12.15 வரைக்கும் நடைபெற்றது. ஊரே புத்தாண்டை வரவேற்று பட்டாசு வெடித்து புத்தாண்டை கொண்டாடி வரும் சூழ்நிலையில் ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் CAA, NRC க்கு எதிராகவும் போராட்டத்தை நடத்தினர். பலத்த போலிஸ் பாதுகாப்பு அமல்படுத்தபட்டது.

மேலும் படிக்க