September 24, 2021
தண்டோரா குழு
கோவை பெரியகடை வீதி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர்களிடம் போதை மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது. அவர்கள் இந்த போதை மாத்திரைகளை இளைஞர்களுக்கு விற்பனை செய்ததும், அவர்கள் உக்கடம் புல்லுக்காடு பகுதியை சேர்ந்த நவசாத் (22), செபீக் (24), நிசார் என்கிற நிசாருதீன் (22) என்பதும் தெரியவந்தது.
அவர்கள் 3 பேரையும் கைது செய்து அவர்கள் வைத்திருந்த போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.