April 11, 2020
தண்டோரா குழு
கோவையில் போதைக்காக சானிடைசர் குடித்த சிலிண்டர் சப்ளை செய்யும் வாலிபர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்தவர் பெர்னார்ட். இவருக்கு திருமணமாகி மூன்று பெண் குழந்தைகள் உள்ளது. இவர் திருப்பூரில் சிலிண்டர் சப்ளை செய்யும் வேலை செய்து வருகிறார்.
கொரோனா வைரஸ் காரணமாக தற்போது நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகளும் மூடப்பட்டுள்ளது. இந்தநிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான பெர்னார்ட் கடந்த இரண்டு நாட்களாக சானிடைசர் குடித்து வந்து உள்ளார். மேலும் உணவு ஏதும் உண்ணாமல் தொடர்ந்து சானிடைசர் மட்டுமே போதைக்காக குடித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.ஆனால்
சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.