• Download mobile app
04 Nov 2025, TuesdayEdition - 3555
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் போக்குவரத்து போலீசாருக்காக நிறுவப்பட்ட ‘பயோ டாய்லெட்’ இன்று திறப்பு

November 10, 2018 தண்டோரா குழு

இந்தியாவிலேயே முதன் முறையாக கோவையில் போக்குவரத்து போலீசாருக்காக நிறுவப்பட்ட நிழற்குடையுடன் கூடிய ‘பயோ டாய்லெடை போக்குவரத்து துணை ஆணையர் இன்று திறந்து வைத்தார்.

சாலை போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் காவலர்களுக்கு சிக்னலுக்கு இடைய நிழற்குடை அமைக்கப்படும் ஆனால் பெரும்பாலான நிழற்குடைகள் போதிய பராமரிப்பு இன்றி காணப்படுவதால் போக்குவரத்து காவலர்கள் மழை வெயில் நின்று பணியாற்ற வேண்டி நிலையில் உள்ளனர். கழிவறைக்கு செல்ல வேண்டும் என்றால் உடனடியாக செல்ல முடியாது குறிப்பாக பெண் காவலருக்கு கழிப்பறை இல்லாதது மிக பெரிய சிரமமாகவே இருந்து வந்தது.

இந்நிலையில் இதற்கு தீர்வு காணும் நோக்கத்தில் கோவை அவினாசி சாலையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி சிக்னலில் கழிவறையுடன் கூடிய நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதன்முறையாக போக்குவரத்து போலீசாரின் வசதிக்காக ‘பயோ டாய்லெட்’ உடன் கூடிய நிழற்குடை சுமார் ரூ. 4 லட்சம் மதிப்பில் தனியார் நிறுவன உதவியுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பயோ டாய்லெட்டை இன்று பார்க் நிறுவனத்தின் துணைத் தலைவர் முரளிதரன்யுடன் இணைந்து இன்று போக்குவரத்து துணை ஆணையர் சுஜீத் குமார் திறந்து வைத்தார்.

இது குறித்து பார்க் தகவல் தொழில் நுட்ப குழுமத்தின் துணைத் தலைவர் முரளிதரன் கூறுகையில்,

இங்கு சிக்னலில் நிற்கும் போக்குவரத்து காவலர்கள் படும் கஷ்டங்களை நான் பார்த்துள்ளேன். அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்து போக்குவரத்து காவலர் உதவியுடன் இந்த பயோ டாய்லெட் அமைத்துள்ளோம். நிழற்குடையுடன் கூடிய இந்த பயோ டாய்லெட் வாகன புகையில் இருந்து தற்காத்துக்கொள்ளும் வகையில் கண்ணாடி அறை, பேன், லைட் போன்ற அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பயோ டாய்லெட்டுக்கு அதிகப்படியான தண்ணீர் தேவைப்படாது. இதற்காக சாலையில் எந்தவித குழிகளையும் தோண்ட தேவையில்லை. இவை முற்றிலுமாக பாதுகாப்பானது சுகாதாரமானது என்றார்.

மேலும் போக்குவரத்து போலீசாருக்கு தமிழகத்தில் பல்வேறு சிக்னல்களில் இந்த பயோ டாய்லெட்டை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் படிக்க