February 21, 2023
தண்டோரா குழு
கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியில் இன்று காலை மேட்டுப்பாளையம் சாலையில் காரை நிறுத்திவிட்டு குடி போதையில் காருக்குள்ளேயே உறங்கிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
சாலையில் நீண்ட நேரம் கார் நிறுத்தப்பட்டிருந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து போலீசார் முன்னிலையில் பொதுமக்கள் திரண்டு நீண்ட நேரம் காருக்குள் தூங்கிய நபரை எழுப்பியும் அவர் எழுந்திருக்காததால் கார் கண்ணாடியை உடைத்து குடிபோதையில் இருந்த நபரை வெளியேற்றினர்.
விசாரணையில் போதையில் இருந்த நபர் கோவை வாகராயம்பாளையம் பகுதியை சேர்ந்த ரஞ்சித் என்பதும் அவர் தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணி புரிந்து வரும் நிலையில்,மன உளைச்சலால் காலையிலேயே அதிகளவிலான மது அருந்தி வாகனத்தை ஓட்டி விபத்து உண்டாக்கி பின்னர் வாகனம் ஓட்ட முடியாமல் சாலையிலேயே நிறுத்தி உறங்கியது தெரியவந்துள்ளது.
போலீசார் அவர் மீது ட்ரங் அண்டு டிரைவ் வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்து காரை பறிமுதல் செய்தனர்.