• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்- 60 சதவீத பேருந்துகள் இயங்கவில்லை

February 26, 2021 தண்டோரா குழு

கோவையில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் இரண்டாவது நாளாக 60 சதவீத பேருந்துகள் இயங்கவில்லை பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக கோவையில் 60 சதவீத பேருந்துகள் இயக்கவில்லை இதன் காரணமாக பொதுமக்கள் மிகுந்த அவதி அடைந்தனர்.ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தற்காலிக பணியாளர்களுக்கு நிரந்தர பணி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியர்கள் தமிழகம் முழுவதும் நேற்று முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர்.

அதன்படி கோவையில் அரசு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் எல் பி எஃப், சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி,உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவையில் 1200 பேருந்துகள் கோவை கோட்டத்தில் 3000 நகரப் பேருந்துகள் மற்றும் 1500 வெளியூர் பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக 40% பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன 60% பேருந்துகள் இயக்கப்படவில்லை.சில பேருந்துகளை ஏபிடி தொழிற்சங்கத்தினர் மற்றும் தற்காலிக ஊழியர்கள் இயக்கினர்.

தனியார் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்பட்டன குறைவான எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்படாததால் வேலைக்கு செல்வோர் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் பெரும் அவதிக்கு உள்ளாகிறார்கள் இதன் காரணமாக கோவை உக்கடம் காந்திபுரம் சிங்காநல்லூர் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் குறைந்த அளவு அரசு பஸ்கள் இயக்கப்பட்டதால் வெறிச்சோடி காணப்பட்டன இந்த வேலை நிறுத்தத்தில் கோவை மண்டலத்தில் ஐயாயிரத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க