January 13, 2021
தண்டோரா குழு
கோவையில் போகி பண்டிகையை ஒட்டி இந்து மக்கள் கட்சியினர் பெரியாரின் புத்தகங்களை தீயிட்டு கொளுத்த முயற்சி மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
போகி பண்டிகை தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.இப்பண்டிகையையொட்டி இந்து இறையாண்மைக்கு எதிராக பெரியாரின் புத்தகங்கள் இருப்பதாக கூறி இந்து மக்கள் கட்சி சார்பில் அவரின் புத்தகங்களை தீயிட்டு கொளுத்த முயற்சித்தனர்.
அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் சிவத்திரு பிரசன்ன ஸ்வாமிகள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பெரியாரின் கடவுள் மறுப்பு,பெண் ஏன் அடிமையானாள் உள்ளிட்ட அவரின் புத்தகங்களை தீயிட்டு கொளுத்திவதில் அக்கட்சியினர் முனைப்பு காட்டினர். அப்போது போலீசார் இந்து மக்கள் கட்சியினரை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து செல்வபுரம் காவல்துறையினர் பிரசன்ன ஸ்வாமியை கைது செய்து அழைத்து சென்றனர்.இச்சம்பவத்தால் அசோக் நகர் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.