• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பொற்கொல்லர்கள் கூட்டமைப்பின் முதலாம் ஆண்டு பொதுக்குழு கூட்டம்

January 1, 2020

கோவையில் நடைபெற்ற பொற்கொல்லர்கள் கூட்டமைப்பின் முதலாம் ஆண்டு கூட்டத்தில் பொற்கொல்லர்களின் , அடுத்த தலைமுறைக்கு தொழில்நுட்பத்தை கற்றுத்தரும் வகையில் மத்திய மாநில அரசுகள் தொழில் குறித்த கருத்தரங்குகள், மற்றும் தங்க நகை தொழிற்பயிற்சிக் கூடம் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

கோவையில் பொற்கொல்லர்கள் கூட்டமைப்பின் முதலாம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் காந்திபார்க் பகுதியில் உள்ள அட்சயா அரங்கில் நடைபெற்றது.கூட்டமைப்பின் தலைவர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இதில்,கூட்டமைப்பின் மேலாண் இயக்குனர் கமலதாசன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

சிறப்பு விருந்தினராக கொடிசியா அமைப்பின் தலைவர் ராமமூர்த்தி கலந்து கொண்டு பேசுகையில்,
பொற்கொல்லர்களுக்கு என துவங்கப்பட்ட இந்த அமைப்பினால் தங்க நகை தொழில் மேம்படுவதோடு கோவையில் தங்க நகை தொழில் மேலும் நல்ல வளர்ச்சி பெறும் என பேசினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவ்வமைப்பின் தொழில் நுட்ப பங்குதாரர் திருப்பதி ராஜன்,

இந்த கூட்டமைப்பின் செயல் திட்டத்தை தமிழக அரசு விரைவில் ஆய்வு செய்து மத்திய அரசுக்கு அனுப்ப உள்ளதாகவும் இதனால் இந்த ஆண்டு தங்க நகை தொழிலாளர்கள் நாற்பது சதவீத மானியம் பெற வாய்ப்புள்ளதாகவும்,பொற்கொல்லர்களின் , அடுத்த தலைமுறைக்கு தொழில்நுட்பத்தை கற்றுத்தரும் வகையில் மத்திய அரசு கருத்தரங்குகளோ, தங்க நகை தொழிற்பயிற்சிக் கூடம் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார். நிகழ்ச்சியில் பாலசந்தர், வெங்கடேசன், செந்தில் குமார் உட்பட முதலீட்டாளர்கள்,இயக்குனர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க