• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பொது இடத்தில் தாய்பால் கொடுத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

August 8, 2022 தண்டோரா குழு

குழந்தைக்கு பசிக்கும் போது,பொது இடங்களில் தாய்மார் தைரியமாக தாய்பால் கொடுக்க முன்வரவேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பொது இடத்தில் தாய்பால் கொடுத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

உலக தாய் பால் வார விழாவை முன்னிட்டு உலகம் முழுவதிலும் குழந்தைகளுக்கு அவசியம் தாய்பால் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேரு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தபட்டு வருகிறது.இதன் ஒருபகுதியாக தாய்மார்கள் வெளியில் செல்லும்போதும், பொது இடங்களில் இருக்கும்போதும் எந்த வித கூச்சமுமின்றி குழந்தைக்கு பால் கொடு முன்வர வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தாய்மார்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் பேரண்டிங் நெட்வொர்க் மற்றும் தாய்மார்கள் பொது இடத்தில் ஒன்றிணைந்து குழந்தைகளுக்கு தாய்பால் கொடுக்கும் நிகழ்வினை கோவை பந்தையசாலை பகுதியில் நடத்தினர்.

இதில் பொது இடங்களில் குழந்தைக்கு தாய்பால் கொடுக்க மறைவான பகுதிக்கோ அல்லது கழிவரை போன்ற பகுதிக்கோ செல்ல வேண்டியது இல்லை.குழந்தைகளின் ஆரோக்கியம் தொடர்பான விஷயத்தின் கண்டிப்பாக சுகாதாரம் என்பதை தாய்மார்கள் கடைபிடிக்க வேண்டும் என்றும் பொது இடங்களில் தைரியமாக தாய்பால் கொடுக்கவேண்டும் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.இதில் சுமார் 30க்கும் மேற்பட்ட தாய்மார்கள் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க