• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் பொதுமுடக்கம் தேவையில்லை – மாவட்ட ஆட்சியர்

June 23, 2020 தண்டோரா குழு

கோவையில் ஆட்டோக்களில் ஒலிப்பெருக்கி மூலம் கொரோனா பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பேரணியை மாவட்ட ஆட்சியர் ராசாமணி துவக்கி வைத்தார். மாவட்டம் முழுதும் 400 ஆட்டோக்களை பயன்படுத்தி இந்த விழிப்புணர்வு மேற்கொள்ளப்படுகிறது.

தொடர்ந்து தனியார் தொலைகாட்சிக்கு பேட்டியளித்த மாவட்ட ஆட்சியர் அவர்,

கோவையில் வெளி மாநில மற்றும் வெளி மாவட்டத்தில் இருந்து வருபவர்கள் மூலமாகவே கொரோனா தொற்று ஏற்படுவதாகவும், அவ்வாறு கோவைக்கு வந்தவர்கள் 17 ஆயிரம் பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்படுள்ளதாகவும் கூறினார். மேலும் தனிமைப் படுத்தப்பட்டவர்கள் அறிவிப்பை மீறி வெளியே வந்தால் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்டும் எனவும், தொடர்ந்து மாநில மற்றும் மாவட்ட எல்லைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.கோவையில் நாள்தோறும் 2000 பேருக்கு கொரோனோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இன்று 10 பேருக்கு கொரோனோ உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும்,கோவை மாவட்டத்திற்கு பொதுமுடக்கம் தேவையில்லை.கட்டுப்பாடுகளை மீறுபவர்களை கண்காணிக்க மாநகராட்சி மற்றும் வருவாய்த்துறை துறை அதிகாரிகள் அடஙகிய பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும் படிக்க