• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பொதுமக்களுக்கு தேசியக் கொடி வழங்கிய எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்

August 8, 2022 தண்டோரா குழு

இல்லம்தோறும் தேசியக் கொடி திட்டம் கடை, கடையாக வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் நேரில் சென்று பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ தேசியக்கொடி வழங்கினார்.

இல்லம்தோறும் தேசியக் கொடி என்ற திட்டம் இளைஞர்கள் மத்தியில் ஓர் எழுச்சியை ஏற்படுத்தும், இத்திட்டம் மூலம் வீடுகளில் ஏற்றப்படும் கொடி இரவிலும் பறக்கலாம்” என்று பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ தேசிய கொடியை வழங்கினார்.

மூவர்ண கொடி குழந்தைகள் மனதிலும் இளைஞர்கள் மனதிலும் பதிய வேண்டும் என்பதற்காக இல்லம் தோறும் தேசியக் கொடி என்ற திட்டத்தை மத்திய அரசு சார்பாக பாரத பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார்.
மேலும்,இந்தத் திட்டத்தின் மூலம் வீடுகளில் ஆகஸ்ட் 13 ஆம் தேதி ஏற்றப்படும் கொடி ஆகஸ்ட் 15 ம் தேதி மாலை 6 மணி வரை பறக்கலாம் என்று சொல்லி இருக்கிறார்.

இந்நிலையில், பாஜக தேசிய மகளிர் அணி தலைவி மற்றும் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி எம் எல் ஏ வானதி சீனிவாசன் ரங்கே கவுண்டர் வீதி இடையர் வீதி ஜங்ஷனில் உள்ள கூலிஸ் கார்னர் பகுதியில் 75வது ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு அங்குள்ள பொது மக்களுக்கு தேசியக் கொடியை வழங்கினார்.

இந்நிகழ்வில் உக்கடம் மண்டல தலைவர் சேகர் மற்றும் மாநில மாவட்ட மண்டல நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க