• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பொங்கல் விழாவில் சிலம்பம் சுற்றி அசத்திய அமைச்சர் வேலுமணி

January 15, 2021 தண்டோரா குழு

கோவை குணியமுத்தூர் பகுதியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி சிலம்பம் சுற்றி அசத்தினார்.

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட குணியமுத்தூர் பகுதியில் அந்த ஊர் பொது மக்கள் மற்றும் நல்லறம் அறக்கட்டளை சார்பாக பொங்கல் விழா தர்மராஜா திரௌபதி அம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.இதில் அந்த பகுதியை சேர்ந்த நூறுக்கும் மேற்பட்ட பெண்கள் கோவில் வளாகத்தில் அமர்ந்து தனித்தனியாக அடுப்பு மூட்டி பொங்கல் பாணை வைத்து பொங்கலிட்டனர்.

விழாவை முன்னிட்டு அந்த பகுதியை சேர்ந்த பள்ளி மாணவ,மாணவிகளின் பறை இசை மற்றும் சிலம்பாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி கலந்து கொண்டு பொங்கல் வைத்த அனைத்து பெண்களுக்கும் தமது வாழ்த்துக்களை தெரிவித்தார்.முன்னதாக நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர்,சிறுமிகள் இணைந்து தமிழர்களின் பண்பாட்டை பறைசாற்றும் பறைஇசை சிலம்பம் போன்ற கலைகளை ஆடியதை பாராட்டிய அமைச்சர் வேலுமணி அவர்களுடன் இணைந்து சிலம்பம் சுற்றி அசத்தினார்.

விழாவில் குணியமுத்தூர் பகுதி கழக செயலாளர் மதனகோபால், மணிகண்டன் யாத்திரை குழு தலைவர் ஜோதி பாசு,முந்திரி கோபால்,வட்ட கழக செயலாளர் ஜெகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க