• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பைக்ரேசில் ஈடுபட்ட 21 வாலிபர்கள் மீது வழக்கு பதிவு

December 12, 2019

வடவள்ளி- மருதமலை சாலையில் பைக்ரேசில் ஈடுபட்ட 21 வாலிபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

கோவை மருதமலை செல்லும் சாலையில் நள்ளிரவில் பைக் ரேஸ்சில் வாலிபர்கள் ஈடுபடுவதாக வடவள்ளி போலீசாருக்கு புகார் கிடைத்தது. இதனை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கினர். நேற்று இரவு வடவள்ளி- மருதமலை சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டார். நள்ளிரவு 11:45 மணிக்கு அங்கு ஐ.ஒ.பி காலனி அருகே போலீசார் சென்ற போது 11 மோட்டார் சைக்கிள்களில் 21 பேர் போட்டி போட்டு கொண்டு அதிவேகமாக சென்றனர். போலீசார் அவர்களை நிறுத்தும்படி கூறினார்கள். ஆனால் 21 பேரும் அதிவேகத்தில் நிற்காமல் சென்றனர்.

சற்று நேரத்தில் 2 குதிரை வண்டிகளும் வேகமாக சென்றது. மோட்டார் சைக்கிளில் சென்ற 21 பேரையும் போலீசார் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். அப்போது அவர்கள் பைக்ரேசில் ஈடுபட்டது தெரிய வந்தது.அவர்கள் சென்ற 11 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 2 குதிரை வண்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டது. 21 பேர் மீதும் சந்தேக வழக்கு பதிவு செய்து பின்னர் எச்சரித்து விடுவித்தனர்.

மேலும் படிக்க