• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பேரூராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் பற்றி எரிந்த 15 ஏக்கர் பயிர்

March 4, 2020

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் 15 ஏக்கர் பயிர் பற்றி எரிந்தன.

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் கவுசிகா நதி அணைக்கட்டு அருகே பேரூராட்சி நிர்வாகம் குப்பைகளை கொட்டி தீயிட்டு வந்தது.இதனால் அப்பகுதி விவசாயிகள் பாதிக்கப்படுவதாக நவீன் என்பவர் மாவட்ட ஆட்சியர், வேளாண் துறையிடம் தொடர் புகார் அளித்து வந்தார்.இந்நிலையில் பேரூராட்சி ஊழியர்கள் இன்று மீண்டும் குப்பைகளை கொட்டி தீயிட்டு எரித்துள்ளனர். இந்த தீ வேகமாக பரவி நந்தகோபால் என்பவரது தோட்டத்திற்குள் பரவியதால் சுமார் 15 ஏக்கர் பரப்பில் போடப்பட்ட சோளத்தட்டுப்பயிர்கள் தீயில் எரிந்து நாசமானது. தீயணைப்பு துறை தொடர்ந்து போராடி தீயை அணைத்ததால் பட்டியில் கட்டி வைத்திருந்த 40 மாடுகள் உயிர் தப்பியது.உடனடியாக பேரூராட்சி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க