April 5, 2018
தண்டோரா குழு
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி முழு அடைப்பு நடைபெற்று வரும் நிலையில் கோவையில் திமுகவினர் சிலர் பேருந்துகள் மீது கல்வீசி கண்ணாடியை உடைக்க முயற்சி செய்தனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி எதிர்கட்சிகள் சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது.இந்த முழு அடைப்பு போராட்டத்தினால் கோவையில் தனியார் பேருதுகள் குறைந்த அளவிலேயே இயக்கப்பட்டது.
இந்நிலையில் கோவையை அடுத்த அண்ணா சிலை முன்பாக திமுகவினர் சிலர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு பேருந்தை மறித்து சில பேருந்தின் மீது கல் வீசினர்.ஆனால் எந்த சேதமும் ஆகவில்லை. இருப்பினும் தொடர்ந்து இயக்கப்பட்டு வரும் பேருந்துகளை மறித்து மிரட்டி வந்தனர். இதனை படம்பிடிக்க சென்ற பத்திரிக்கையாளர்கள் மீதும் திமுகவினர் சிலர் கல்வீச முயன்றனர்.