• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் பேருந்து சேவை தொடக்க விழா

July 7, 2018 தண்டோரா குழு

கோவை மண்டலத்திற்கு வழங்கப்பட்ட 65 புதிய பேருந்துகளில் 25 பேருந்துகளை இன்று முதல் மக்கள் பயன்பாட்டிற்காக உள்ளாட்சிதுறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,

“புதிதாக கேட்கின்ற திட்டங்கள் அனைத்தும் கிடைப்பதாகவும்,மல்டிலெவல் கார் பார்க்கிங் திட்டம் கூடிய விரைவில் தொடங்கப்படுவதாகவும்,குளங்கள் அனைத்தும் சீரமைக்கப்படுகிறதாகவும் தெரிவித்தார்.பேருந்தில் குறைகூறும் அளவிற்கு எந்த குறைபாடும் இல்லை எனவும் நடத்துனர் இல்லா பேருந்து வந்ததன் மூலம் ஆட்குறைப்பு என்பது நடைபெறாத வண்ணம் பார்த்துக்கொள்ளப்படும்.

நடத்துனர் இல்லா பேருந்து திட்டம் மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிரானது என்ற தொழிற்சங்கங்களின் குற்றச்சாட்டை போக்குவரத்துறை அமைச்சருக்கும்,முதல்வரின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்படும் என தெரிவித்தார்.

டிடிவி தினகரன் மட்டும் அல்ல,யார் வந்தாலும் இந்த ஆட்சியை ஒன்றும் செய்ய முடியாது.இவர்கள் குறுக்கு வழியில் செல்ல முயற்சிக்கின்றனர்.டிடிவி தினகரன் பொதுக் கூட்டங்களுக்கு எப்படி கூட்டத்தை கூட்டுகிறார் என்று அனைவருக்கும் தெரியும்.

சூயஸ் குடிநீர் திட்டத்தை யார் எதிர்த்தாலும் அது கோவை மக்களுக்கு செய்யும் துரோகம்.இதுவரை அந்த நிறுவனத்துடனான ஒப்பந்தம் வெளியாகவில்லை என்ற கேள்விக்கு,இந்த திட்டத்தில் அனைத்தும் வெளிப்படைத்தன்மையாக உள்ளது”.எனக் கூறினார்

மேலும் படிக்க