• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் பேக்கரி பொருட்கள் கண்காட்சி துவக்கம்

July 6, 2018 தண்டோரா குழு

கோவையில் பேக்கரி பொருட்கள் கண்காட்சி இன்று துவங்கியுள்ளது.கண்காட்சியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்று வித்யாசமான பேக்கரி பொருட்களை காட்சிப்படுத்தி உள்ளனர்.

இந்­தி­யாவில்,குறிப்­பாக தென் மாநி­லங்­களில் ரொட்டி,பிஸ்கட்,கேக் உள்­ளிட்ட உணவு பொருட்­களை தயா­ரிக்கும் பேக்­கரி துறை,சிறப்­பாக வளர்ச்சி கண்டு வரு­கி­றது.இதை­ய­டுத்து,கோவையில் பேக்­கரி துறை தொடர்­பான கண்­காட்சி,இன்று துவங்கி உள்ளது.

பேக்­கரி துறையில் புதிய தொழில்­நுட்­பங்கள் குறித்து அறிந்து கொள்ளும் வித­மாக இக்­கண்­காட்சி அமைந்து உள்ளது.இதற்­காக பேக்­கரி பொருட்கள் தயா­ரிக்க பயன்படுத்­தப்­படும் நவீன கரு­விகள், பேக்­கரி உணவுப் பொருட்கள் உள்­ளிட்­டவை காட்­சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்த கண்­காட்­சியில் தமி­ழகம்,கேரளா உள்­ளிட்ட மாநி­லங்­களில் இருந்து பேக்­கரி துறையை சேர்ந்த, 10 ஆயிரம் பேர் பங்கேரு உள்ளனர்.மேலும்,பேக்­கரி துறையில் காணப்­படும் சவால்,அரசு செய்ய வேண்­டிய உத­விகள் உள்­ளிட்­டவை குறித்தும் இங்கு ஆலோ­சிக்­கப்­பட உள்­ளது.

இதில், உயர்தரமான பேக்கரி பொருட்களான இனிப்பு மற்றும் கார வகையில்,நொறுக்கு திண்பண்டங்களை காட்சிப்படுத்தி உள்ளனர்.பேக்கரி இயந்திரங்கள்,உற்பத்தியாளர்கள் பங்கேற்க உள்ளதால்,பேக்கரி பொருட்களின் தயாரிப்பாளர்கள்,விற்பனையாளர்கள் நேரடியாக சந்தித்து பல புதிய தொழில்நுட்ப கருவிகளை பார்த்து தங்களுக்கு தேவையானவற்றை அறிந்து கொள்ளும் மேடையாக இந்த கண்காட்சி அமைந்து உள்ளது.

மேலும்,உணவு பதப்படுத்துதல்,சிறு தொழில் வணிகம் செய்பவர்களுக்கு,பயன் உள்ளதாகவும் கண்காட்சி உள்ளது.மூன்று நாட்களுக்கு இந்த கண்காட்சி நடைபெறுகிறது.70க்கும் மேற்பட்ட பேக்கரி மற்றும் உணவு சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அரங்குகள்,பேக்கரி உணவு சேவை,மூலப்பொருட்கள், சுவையூட்டும் பொருட்கள்,சாக்லேட் மற்றும் நவீன இயந்திரங்கள் சம்பந்தமான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாமல்,பல புதிய பொருட்களின் அறிமுகமும் நடைபெற உள்ளது.தென்னிந்தியாவில் பேக்கரி மற்றும் உணவு சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்கள்,விநியோகஸ்தர்கள் மற்றும் நுகர்வோர்கள் சந்தித்து,தொழில் முன்னேற்றத்திற்கான ஆலோசனைகளை இந்த கண்காட்சியில் பகிர்ந்து கொள்ளலாம்.ஏராளமான பொதுமக்கள் இந்த கண்காட்சியை பார்வையிட்டு செல்கின்றனர்.

மேலும் படிக்க