• Download mobile app
01 Apr 2026, WednesdayEdition - 3703
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பெண் போலீசார் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி

March 27, 2022 தண்டோரா குழு

மகளிர் தினத்தை முன்னிட்டு தன்னார்வ மகளிர் அமைப்புகளும்,கோவை மாநகர காவல் துறையில் பணிபுரியும் பெண் காவலர்களும் இணைந்து இரு சக்கர வாகனத்தில் தலைக் கவசம் அணியும் விழிப்புணர்வு பேரணி வடகோவை சிந்தாமணி சந்திப்பில் சந்திப்பில் நடைபெற்றது.

கோவை மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையர் எஸ். ஆர்.செந்தில்குமார் கொடி அசைத்து தொடங்கி வைத்த பேரணி காமராஜர் ரோடு , திருவேங்கடசாமி ரோடு , R.S. புரம் , லாலி ரோடு உள்ளிட்ட வழியாக தடாகம் அரசு பொறியியல் கல்லூரியை சென்றடைந்தது.

200க்கும் மேற்பட்ட மகளிர்கள் மட்டும் கலந்து கொண்ட இதில் இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது கட்டாயம் தலைக் கவசம் அணிய வேண்டும் என பொது மக்களுக்கும் , இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இதில் போக்குவரத்து காவல் உதவி ஆணையர் சிற்றரசு உள்ளிட்ட காவல் ஆய்வாளர்கள் பங்கு பெற்றனர்.

மேலும் படிக்க