February 18, 2020
தண்டோரா குழு
திருமண பெண்ணை சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசை வார்த்தை கூறி ஆபாசப்படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கோவை சிங்காநல்லூரை அடுத்த நீலிகோணம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் ஜிஷ்ணு(28).தனியார் ஸ்டுடியோவில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் கோவையைச் சேர்ந்த 38 வயது பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதையடுத்து நெருக்கமாக பழகி வந்துள்ளனர். ஜிஸ்னு அந்த பெண்ணிடம், சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி அடிக்கடி பணம் பெற்று வந்ததுள்ளதாக கூறப்படுகிறது. இவர்களது நட்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதால் கடந்த மூன்று வருடமாக கணவன் மனைவிபோல் வாழ்ந்து வந்துள்ளனர்.
ஜிஸ்னு, இருவரும் தனிமையில் இருப்பதை செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோவாக எடுத்து , அந்த பெண்ணிடம் காட்டி , அவ்வப்போது பணம் பறித்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று அப்பெண்ணிடம் ஒரு லட்ச ரூபாய் கேட்டு ஜிஸ்னு மிரட்டியதாக தெரிகிறது. அப்போது அந்த பெண் பணம் தர மறுத்ததையடுத்து ஜிஸ்னு கடுமையாக அப்பெண்ணை தாக்கியுள்ளார். மேலும் பணம் தர மறுத்தால் தன்னுடன் தனிமையில் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோவை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து விடுவதாக மிட்ரடியுள்ளார். பயந்து போன அப்பெண் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் ஜிஸ்னு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று புகாரளித்தார். இதனையடுத்து ஜிஸ்னுவிடமிருந்து செல்போனை பறிமுதல் செய்த காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மிதிய சிறையிலடைத்தனர்.