• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பெண்கள் மட்டும் கலந்து கொண்ட இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி

January 21, 2021 தண்டோரா குழு

கோவையில் பெண்கள் மட்டும் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு குறித்து இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் துவங்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பாக 32வது சாலை பாதுகாப்பு வார விழா நிகழ்ச்சி நாள் தோறும் நடைபெற்று வருகிறது. இன்று நான்காம் நாள் நிகழ்ச்சியாக கோவை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பெண்கள் மற்றும் பங்குபெற்ற இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.இதில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி கலந்துகொண்டு துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள், காவலர்கள் ஏராளமானோர் பங்குபெற்றனர். இந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வானது வாகன ஓட்டுனர்கள் தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்தும், நான்கு சக்கர வாகன ஓட்டுநர்கள் சீட்பெல்ட் அணிவதன் அவசியம் குறித்தும், விபத்து அதிகம் நடைபெறும் இடங்களை கண்டறிந்து அதற்கான காரணங்களை நிவர்த்தி செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட குறித்து இந்த வாகன பேரணி நடைபெற்றது.

இந்தப் இருசக்கர வாகனபேரணி மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தொடங்கி காந்திபுரம் வழியாக வ.உ. சி மைதானத்தை வந்தடைந்தது. இதில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் படிக்க