January 22, 2020
கோவை துடியலூர் மீனாட்சி காரடன் பகுதியில் பெண்களின் உள்ளாடைகள் மற்றும் பெண்களின் செருப்புகளை மட்டும் குறிவைத்து திருடும் சைக்கோ திருடனால் குடியிருப்புவாசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கோவை துடியலூர் மீனாட்சி கார்டன் குடியிருப்பில் 250வீடுகள் உள்ளன. இந்த குடியிருப்பு பகுதியில் சமீபகாலமாக சுற்றி திரியும் நபர் ஒருவர் பெண்களின் உள்ளாடைகள் மற்றும் பெண்களின் செருப்பு போன்றவற்றை திருடுவதை வாடிக்கையாக கொண்டு இருக்கின்றார். உள்ளாடைகளும் , செருப்பும் மட்டும் திருடும் இந்த சைகோ திருடனால் இந்த காலனி மக்கள் அச்சத்தில் அடைந்துள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக ஓரே நேரத்தில் உள்ளாடைகளும் , செருப்பும் காணாமல் போனது. தேடி பார்த்த போது ஆளில்லாத ஒரு வீட்டில் செருப்புகளும் உள்ளாடைகளும் அடுக்கி வைக்கப்பட்டு இருந்ததை பார்த்து பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.இந்நிலையில் கடந்த 17 ம் தேதி மீண்டும் இது போன்று பெண்களின் உள்ளாடைகள், செருப்பு போன்றவை திருடப்பட்டது
சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது திருடன் வந்து இவற்றை திருடி சென்ற காட்சிகள் பதிவாகியுள்ளது.
மேலும் பெண்கள் அணியும் நைட்டி உடை அணிந்து திருடி செல்வதும் இந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகி இருக்கின்றது. குடியிருப்புவாசிகள் இது குறித்து துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.