December 13, 2021
தண்டோரா குழு
கோவையில் பூட்டிய வீட்டில் ரூ.1.2 லட்சத்தை கொள்ளை அடித்து சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்செங்கோடு அருகேயுள்ள கூட்டப்பள்ளியை பூர்வீகமாக கொண்டவர் வெங்கடராஜ் (44). தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார். சரவணம்பட்டியில் இவரது வீடு உள்ளது. வெங்கடராஜ் குடும்பத்தினருடன் சொந்த ஊரான திருச்செங்கோடுக்கு சென்று விட்டார்.
இந்நிலையில், இவரது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பது. அக்கம் பக்கத்தினர் இது குறித்து வெங்கடராஜை செல்போனில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, அவர் சரவணம்பட்டியில் உள்ள வீட்டிற்கு வந்து பார்த்தார்.
வீட்டில் பீரோவில் இருந்த 1.2 லட்சம் ரூபாய் மற்றும் 5 ஆயிரம் மதிப்பிலான வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக வெங்கிடராஜ் சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். வீட்டில் யாருமில்லை என தெரிந்து இரவு நேரத்தில் கொள்ளையர்கள் பூட்டை உடைத்து கொள்ளை அடித்ததாக தெரிகிறது. அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.