• Download mobile app
31 Mar 2026, TuesdayEdition - 3702
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பூட்டிய வீடுகளில் 14 பவுன் கொள்ளை

February 3, 2022 தண்டோரா குழு

கோவை கோவில்பாளையம் அருகே உள்ள வரதங்கபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகந்தன் (43), தனியார் நிறுவன ஊழியர். இவர், நிறைமாத கர்ப்பிணியான தனது மனைவியை பிரசவத்திற்காக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து இருந்தார். இதனால் இவரும், குடும்பத்தினரும் சம்பவத்தன்று மருத்துவமனைக்கு சென்று விட்டனர்.‌

அப்போது யாரோ வீட்டின் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து வீட்டில் இருந்த 12 பவுன் தங்க நகைகளை திருடிச்சென்று விட்டனர். இதேபோல் கோவில்பாளையம் பிரிமியர் கார்டன் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (55). இவர், தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றார் . மீண்டும் வீடு திரும்பியபோது கதவு பூட்டு உடைந்து கிடந்தது. வீட்டில் வைத்திருந்த இரண்டு பவுன் தங்க நகைகள் திருடப்பட்டிருந்தது.

கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக கோவில்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க