• Download mobile app
13 Nov 2025, ThursdayEdition - 3564
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் புல்லட் திருடர்கள் 4 பேர் கைது

December 11, 2021 தண்டோரா குழு

கோவை உக்கடம் கிரீன் கார்டனை சேர்ந்தவர் சாதிக்(24). இவர் காந்திபுரம் டவுன் பேருந்து நிலையத்தில் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் நேற்று தனது புல்லட்டை வீட்டருகே உள்ள காலி இடத்தில் நிறுத்தியிருந்தார்.

அப்போது அங்கு சிலர் நைசாக புல்லட் லாக்கை உடைத்து திருட முயற்சி செய்து கொண்டிருந்தனர்.இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சாதிக் சத்தம் போட்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தப்பி ஓட முயற்சி செய்தவர்களை மடக்கி பிடித்து உக்கடம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் புல்லட் திருட முயற்சி செய்தது கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த ஈது கிருஷ்ணன்(19), ராகுல்(21), ஸ்ரீ ஹரி(18) திருவனந்தபுரத்தை சேர்ந்த அலமின்(23), என்பது தெரியவந்தது.

இவர்கள் புல்லட், டியூக் உள்ளிட்ட விலை உயர்ந்த பைக்குகளை மட்டும் குறிவைத்து திருடுவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் எங்கெல்லாம் கைவரிசை காட்டியுள்ளனர் என தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் படிக்க