• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் 6964 மாணவிகள் – மாதம் ரூ.1000 உதவித்தொகை

August 21, 2023 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கையினை அதிகரிக்கும் பொருட்டு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 -உதவித்தொகை வழங்கும் புதுமைப் பெண் திட்டம் முதலமைச்சரால் முதற்கட்டமாக 05.09.2022 அன்றும், இரண்டாம் கட்டமாக 08.02.2023 அன்றும் தொடங்கி வைக்கப்பட்டது.

மாணவிகள் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் படித்து தமிழ்நாட்டில் உயர்கல்வி பயில்பவராக இருத்தல் வேண்டும், தனியார் பள்ளியில் ஆர்.டி.இ.,யின் கீழ் 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயின்ற பின் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்த மாணவியர் இத்திட்டத்தில் பயன்பெறலாம்.

கோவை மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தின் முதற்கட்டத்தில் 2959 உயர்கல்வி பயிலும் மாணவிகளும், இரண்டாம் கட்டத்தில் 4005 உயர்கல்வி பயிலும் மாணவிகளும் என மொத்தம் 6964 மாணவிகள் மூவலுார் இராமாமிர்தம் அம்மையார் நினைவு புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர் .

மேலும், இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் சமூகநலத்துறையின் சார்பில் கடந்த 2021 – 2022 ஆம் நிதியாண்டில் 1236 பயனாளிகளுக்கு தலா ரூ.25000 வீதம் ரூ. 3.09 கோடி மதிப்பிலும், 2022 – 2023 ஆம் நிதியாண்டில் 1298 பயனாளிகளுக்கு தலா ரூ.25,000 வீதம் ரூ.3.24 கோடி மதிப்பிலும் என மொத்தம் 2534 பயனாளிகளுக்கு ரூ.6.33 கோடி மதிப்பில் வைப்பு நிதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க