• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் புதிய தொழிசாலையை துவங்கிய சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த லீஸ்டர் குழுமம்

November 23, 2023 தண்டோரா குழு

சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த லீஸ்டர் குழுமம் “வெல்டி டெக்னாலஜிஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்” என்னும் பெயரில் புதிய தொழிற்சாலையை கோவையில் சின்னவேடம்பட்டியில்
இன்று துவக்கியது.

இந்திய சந்தையில் வேகமாக வளர்ந்து வரும் பொறியியல் கருவிகளின் தேவையை கருத்தில் கொண்டு அவற்றை சிறந்த முறையில் சப்ளை செய்யும் விதமாக லீஸ்டர் குழுமம் இப்போது குறிப்பிட்ட ” வெல்டி ” பிராண்ட் தயாரிப்புகளை நேரடியாக இந்தியாவில் தயாரித்து , விற்பனை செய்கிறது.சமீப காலமாக , லீஸ்டர் குழுமத்தின் முக்கிய வர்த்தக சந்தையாக இந்தியா மாறி உள்ளது.

பல்துறை வெல்டிங் பணிகளுக்கான இதன் வெல்டிங் மெஷின் கருவி மற்றும் ஆட்டோமேடிக் பிளாஸ்டிக் வெல்டிங் எந்திரங்கள் ஆகியவற்றின் தேவை என்பது இந்திய சந்தையில் அதிக அளவில் உள்ளது.இந்த கருவிகள் இந்தியாவில் கூடாரங்கள், தார்ப்பாய்கள் மற்றும் விளம்பரப் பதாகைகள் அமைக்க , கொள்கலன் மற்றும் படகு கட்டுமானப் பணிகள், நீர்ப்பாசன குளங்கள் மற்றும் மீன் பண்ணைகளை சீல் செய்தல் , சுரங்கப்பாதை கட்டுமானம் மற்றும் கேபிள் அமைக்கும் பணிகள் என பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன.

வெல்டி தயாரிப்புகள் இந்திய சந்தைக்கு ஏற்ப உள்ளூரிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது கோவையில் துவக்கி உள்ள புதிய ஆலையில் , வெல்டி டெக்னாலஜிஸ் இந்தியா நிறுவனம் உள்ளூர் சப்ளையர்களைப் பயன்படுத்தி இந்திய சந்தைக்கு ஏற்ற வெல்டி பிராண்ட் வெல்டிங் கருவிகள் மற்றும் ஆட்டோமேடிக் பிளாஸ்டிக் வெல்டிங் எந்திரங்கள் ஆகியவற்றை தயாரிக்க இருக்கிறது.

இது குறித்து லீஸ்டர் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி மார்ட்டின் ஜிங் கூறுகையில் ,

எங்கள் குழுமம் இந்திய வாடிக்கையாளர்களுக்கு இன்னும் சிறப்பான சேவை செய்ய விரும்புகிறது.அதனைக் கருத்தில் கொண்டுதான் எங்களின் இந்த புதிய ஆலை இங்கு திறக்கப்பட்டுள்ளது. வெல்டி பிராண்ட் சிறந்த தரத்தைக் கொண்டு இருப்பதோடு அவற்றை எளிதாக கையாள முடியும்.

மேலும் இதன் விலையும் மிகக் குறைவாகும்.இந்திய சந்தைக்கு ஏற்றவாறு புதிய வெல்டிங் கருவிகளை இந்தியாவில் உருவாக்கி உற்பத்தி செய்வதே எங்கள் முக்கிய குறிக்கோளாகும்.மேலும் இதற்கான உதிரி பாகங்கள் இந்திய சப்ளையர்களிடமிருந்து பெறப்படுகின்றன . இதன் மூலம் தொழில்சார்ந்த தேவைகள் மற்றும் தனிப்பட்ட தேவைகளை இன்னும் வேகமாகவும் திறமையாகவும் எங்களால் பூர்த்தி செய்ய முடியும் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க