• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் புதிதாக மதுபானக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்திய 100க்கும் மேற்பட்டோர் கைது

October 5, 2018 தண்டோரா குழு

கோவை வெள்ளலூரில் புதிதாக மதுபானக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, ஆர்ப்பாட்டம் நடத்திய 100 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

கோவை வெள்ளலூர் பகுதியில் புதிதாக அரசு மதுபானக்கடை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பள்ளி, குடியிருப்புகளுக்கு அருகே மதுபானக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, வெள்ளலூர் பேருந்து நிலையத்தில் அனைத்து கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக, காங்கிரஸ், சிபிஎம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.

கடந்த பத்து ஆண்டுகளாக மதுபானக்கடை இல்லாத நிலையில புதிதாக் மதுபானக்கடை திறப்பது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துமெனவும், மாணவர்கள் மது பழக்கத்திற்கு ஆளாக வாய்ப்பிருப்பதாகவும் கூறிய ஆர்ப்பாட்டக்காரர்கள், மதுக்கடை திறக்க கூடாது என வலியுறுத்தினர். இதையடுத்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய 100 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் படிக்க