• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் பில்லர் 129 எனும் புதிய டிரைவ் இன் ரெஸ்டாரெண்ட் விரைவில் துவக்கம் !

December 2, 2021 தண்டோரா குழு

கோவை நகரின் முக்கிய பகுதியான அவினாசி சாலையில் அதிக இட வசதியோடு கூடிய பில்லர் 129 எனும் புதிய டிரைவ் இன் ரெஸ்டாரெண்ட் விரைவில் துவங்கப்படவுள்ளது.

கோவை நகரில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நிக்வின் விருந்தோம்பல் சேவை நிறுவனம் உணவு துறையில் தனி முத்திரை பதித்து வருகிறது.இந்நிலையில் கோவை நகரின் முக்கிய பகுதியான அவினாசி சாலையில் சுமார் அரை ஏக்கர் பரப்பளவில் பில்லர் 129 எனும் புதிய ட்ரைவ் இன் ரெஸ்டாரெண்ட் வரும் வரும் ஆறாம் தேதி துவங்க உள்ளது.

இந்நிலையில் இது குறித்து,நிக் வின் விருந்தோம்பல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும் பில்லர் 129 ன் உரிமையாளரும் ஆன மோகன் சந்தர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர்,கோவை நகரில் உணவகங்கள் பல இருந்தாலும் ட்ரைவ் இன் வசதி கொண்ட ரெஸ்டாரெண்ட் நகரின் மைய பகுதியில் இதுவே முதல் முறையாக துவங்கப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் இருபதுக்கும் மேற்பட்ட கார்களை நிறுத்தி உணவு உண்ணும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் இந்த உணவகத்தில், சைனீஸ், தாய்,மலாய்,பர்மிஸ்,அரேபியன் மற்றும் இந்திய வகைகள் அனைத்து விதமான காண்டினெண்டல் உணவு வகை பரிமாறப்படுவதாக கூறிய அவர்,ட்ரைவ் இன் வசதி மட்டும் அல்லாது குளிர் சாதன வசதியுடன் அமர்ந்து சாப்பிடும் வகையிலான டைனிங் ஹால்,பிறநரத நாள் போன்ற பிரத்யேக விழாக்களுக்கென சிறிய பார்ட்டி ஹால் வசதியும் இங்கு உள்ளதாக தெரிவித்தார்.

காலை பதினோரு மணி முதல் இரவு பதினோரு மணி வரை செயல்பட உள்ள பில்லர் 129 ரெஸ்டாரெண்ட் கோவை வாழ் மக்களிடையே பெரும் வரவேற்பை பெறும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.இந்த சந்திப்பின் போது நிக் வின் விருந்தோம்பல் நிறுவனத்தின் இயக்குனர் உமா உடனிருந்தார்.

மேலும் படிக்க